வெளியாகியது 'பொன்னியின் செல்வன்' நடிகர்கள் பட்டியல் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தற்பொழுது சமூக வலைதளங்களின் தமிழக வாசகர்களின் அனேகம் பேர் விரும்பும் 'பொன்னியின் செல்வன்' கதாபத்திரங்களில் யார், யார் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
முதுபெரும் எழுத்தாளர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினம் 'பொன்னியின் செல்வன்', இந்த புதினத்தை படமாக்க எம்.ஜி.ஆர் காலந்தெட்டே முயற்சிகள் நடந்து வருகின்றன, ஆனால் நடந்தபாடில்லை. இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இப்படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தில் எந்தெந்த நடிகர்கள் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர் என்ற பட்டியல் நேற்று சமூக வலைதளத்தில் வெளியாகியது.
அதில்,
சுந்தர சோழர் - பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் - விக்ரம்
அருண்மொழி வர்மன் - ஜெயம் ரவி
வந்தியத்தேவன் - கார்த்தி
குந்தவை - த்ரிஷா
நந்தினி / மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி - ஐஸ்வர்ய லட்சுமி
வானதி - ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்
கடம்பூர் சம்புவராயன் - நிழல்கள் ரவி
மலையமான் - லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் - பிரபு
சோமன் சாம்பவன் - ரியாஸ்கான்
ரவிதாசன் - கிஷோர்
கந்தன் மாறன் - விக்ரம் பிரபு
பார்த்திபேந்திர பல்லவர் - ரகுமான்
என வெளியாகியுள்ளது. இதில் மேலும் யார் நடிக்கவுள்ளார்கள், அவர்களுக்கு எந்த மாதிரியான காதாபாத்திரம் என் தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.