Begin typing your search above and press return to search.
அண்ணாத்த முதல் பார்வை பற்றிய அறிவிப்பு - ஆராவாரத்தில் ரசிகர்கள்!

By : Mohan Raj
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'அண்ணாத்த' படத்திட் முதல் பார்வை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இப்படத்தின் முதல் பார்வை எப்போது என்ற ஆர்வம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்து இருந்து வந்தது.
இந்நிலையில், வருகிற ஆகஸ்ட்12-ந்தேதி டைரக்டர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Next Story
