நிறைய தடைகளை 'தலைவி' படம் கடந்துள்ளது - கங்கனா உருக்கம்!

"நிறைய தடங்கல்களை இந்தப்படம் கடந்துள்ளது" என தலைவி படம் பற்றி அதன் நாயகி கங்கனா பேசியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. இயங்குனர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் செல்வி.ஜெயலலிதாவாக நடித்த நடிகை கங்கனா கூறியதாவது, "கொரோனோ இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் படம் இது.
இன்னும் நோய் தொற்று குறையவில்லை. இருந்தபோதிலும் நாம் நமது வேலைகளை துவங்க வேண்டி உள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய ஏற்ற, இறக்கங்கள். ஏப்ரல் 23ல் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தோம்.
நிறைய தடைகளை கடந்து இந்த படம் ரிலீஸை நெருங்கிவிட்டது. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஒரு குழந்தைபோல் இந்த படத்தை காண, குறிப்பாக தமிழ் பதிப்பை காண ஆவலாய் உள்ளேன்" என கூறியுள்ளார்.