நீங்கள்தான் உண்மையான லிட்டில் சூப்பர் ஸ்டார் - புற்றுநோய் குழந்தைகளை ஊக்கப்படுத்திய சிம்பு!

"புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தைகளிடம் நீங்கள்தான் உண்மையான லிட்டில் சூப்பர் ஸ்டார்" என நடிகர் சிம்பு கலந்துரையாடி அவர்களை உற்சாகபடுத்தியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்று புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசி அவர், "கடந்த வருடமே என்னை அழைத்திருந்தார்கள். அப்போது என்னால் வரமுடியவில்லை. எனவே இந்த வருடம் கண்டிப்பாக வரவேண்டும் என்று முடிவு செய்து வந்துள்ளேன். குழந்தைகள் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒரு காரணத்திற்காக தான் வந்தேன். நம்மால் முடிந்த அளவு நேர்மறை எண்ணங்களை கொடுப்போம்" என பேசினார்.
அங்குள்ள குழந்தைகள் மத்தியில் சிம்பு தன்னம்பிக்கை தரும்விதமாக உரையாடியது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
Pic credits - Chennai Times