Kathir News
Begin typing your search above and press return to search.

புகழ் இருந்தும் கனிவான மனிதர் - அஜித் பற்றி பைக் ரைடர் மரால் யசார்லூ !

புகழ் இருந்தும் கனிவான மனிதர் - அஜித் பற்றி பைக் ரைடர் மரால் யசார்லூ !
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Sept 2021 12:45 PM IST

"அஜித் அவர்கள் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் தெரிந்துக்கொண்டேன். அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது!" என அஜித்'தை சந்தித்த மரால் யசார்லூ தெரிவித்துள்ளார்.





ஈரான் நாட்டைச் சேர்ந்த மரால் யசார்லூ பைக்கில் உலகம் முழுவதும் தனியாக பயணம் செய்துள்ளார். அவர் உலகில் 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பார்த்துள்ளார், இதுவரை 11000 கிலோமீட்டர் வரை பைக்கில் பயணம் செய்துள்ளாராம். இவர் சமீபத்தில் நடிகர் அஜித்'தை சந்தித்தார்.





அந்த சந்திப்பு பற்றி அவர் விளக்கும் போது, "என்னை பி.எம்.டபிள்யு கம்பெனி தொடர்பு கொண்டு சக பைக் ரைடர் ஒருவரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் அஜித்குமாரை சந்தித்து உலகபயணம் பற்றிய எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொண்டோம், அஜித் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் அறிந்துகொண்டேன். அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது!,





தல ரசிகர்களுக்காக, உங்கள் பேவரைட் நடிகரின் உடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது, அவர் அடக்கமானவர், கனிவானவர், மரியாதைக்குரியவர், மிருதுவானவர், மென்மையான மனிதர் மற்றும் சிறந்த மனிதர் மற்றும் அவரை அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சமூக ஊடகங்களில் இல்லை, இது அவருடைய தனியுரிமையை நாம் மதிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவரது அனுமதியுடன் புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன" என அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News