நாகார்ஜுனா அமீர்கானுக்கு வைத்த குடும்ப பார்ட்டியில் சமந்தா மிஸ்ஸிங் !

சமந்தா-நாகசைதன்யா ஜோடி விவாகரத்து பற்றி பரவலாக பேசப்படும் நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவரும் 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர், திருமணத்திற்கு பின்னரும் சமந்தா நடிக்க வேண்டும் என அடம் பிடித்தது பாரம்பர்யமிக்க நாகார்ஜுனா குடும்பத்தினர் அதனை மறுத்தனர். ஆனால் சமந்தா அதனை கேளாமல் தொடர்ந்து படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு வந்த சமந்தாவிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், மிகவும் காட்டமாக "புத்தி இருக்கா?" என கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமீர்கான் தனது படத்தின் பிரமோஷன் ஒன்றிற்கு, ஹைதராபாத் வந்தார். அமீர்கான் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பதால் அமீர்கானுக்கு நாகார்ஜுனா இரவு விருந்து வைக்க விரும்பினார். இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமீர்கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் பிரமாண்ட இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்தில் நாகார்ஜுனா குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்ட நிலையில் சமந்தா மட்டும் கலந்துகொள்ளவில்லை. இதானல் இருவரின் விவாகரத்து விவகாரம் ஊர்ஜிதமாகிவிட்டதாக தெரிகிறது.