Kathir News
Begin typing your search above and press return to search.

'ராக்கெட்ரி' ரிலீஸ் தேதி அறிவித்த மாதவன் !

ராக்கெட்ரி ரிலீஸ் தேதி அறிவித்த மாதவன் !

Mohan RajBy : Mohan Raj

  |  27 Sep 2021 10:45 AM GMT

நடிகர் மாதவன் இயக்கிய 'ராக்கெட்ரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.





இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் 'ராக்கெட்ரி'. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரம்மாண்டமாக நடந்த இப்படத்தின் வேலைகள் முடிந்துள்ளன.





மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 2022'ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1'ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News