பி.சி.ஆர். சட்டத்தை தோலுரித்து காட்டிய ருத்ரதாண்டவம்! ஹெச். ராஜா புகழாரம்!
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி நடித்துள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் நாடக காதல், போதை கலாச்சாரம் மற்றும் பிசிஆர் சட்டம் உள்ளிட்டவைகள் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
By : Thangavelu
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி நடித்துள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் நாடக காதல், போதை கலாச்சாரம் மற்றும் பிசிஆர் சட்டம் உள்ளிட்டவைகள் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இன்று ருத்ரதாண்டவம் படத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் பாஜக பிரமுகர்கள் இப்ராஹிம், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதன் பின்னர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, உண்மையான ருத்ரதாண்டவத்தை பார்த்தோம். சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டும் அல்ல. மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும், சமூக ரீதியாக, சட்ட ரீதியான ஒரு முயற்சியும் ஆகும்.
ருத்ரதாண்டவத்தை பொருத்தமட்டில் மூன்று விஷயங்களை தம்பி மோகன் ஜி படமாக்கியுள்ளார். இன்று 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் படிக்கின்ற காலத்தில் படிப்பதற்கு மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். காதலில் இல்லை. அதுப்பற்றி கதை இந்தப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது இன்றைக்கு இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுக்கு முன்னர் முக்குக்கு முக்கோண விளம்பரம் பார்க்க முடிந்தது. ஆனால் இன்னைக்கி செயற்கை கருத்தரிப்பு மையங்களை பார்க்கிறோம். இப்படியே போய் கொண்டிருந்தால் நாளைக்கு தமிழன் தன் மனைவிக்கு தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இதற்கு மிக முக்கிய காரணம் போதை கலாச்சாரம் அதனை இளைஞர்களுக்கு புரியும்படி காட்சி இடம் பெற்றுள்ளது.
மூன்றாவதாக, பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களையும் தோலுரித்து காட்டியுள்ளார். இந்தப்படம் எந்த மதத்தையோ அல்லது ஜாதியை பற்றியோ இழிவாக பேசவில்லை. தற்போது சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார். அதே போன்று மற்ற தலைவர்களும் படம் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
Source: Dinamalar