நான் கனவிலும் கூட நினைக்கவில்லை - எஸ்.பி.பி'க்காக உருகிய சூப்பர் ஸ்டார் !

"இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை" என சூப்பர் ஸ்டார் ரஜினி எஸ்.பி.பி'க்காக உருகியுள்ளார்.
நேற்றைய தினம் 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியது. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனோ தொற்று காரணமாக எஸ்.பி.பி மறைந்தார். எனவே நேற்று வெளியான இந்த பாடல்தான் எஸ்.பி.பி சூப்பர் ஸ்டாருக்காக பாடிய கடைசி பாடல். இதனையடுத்து நேற்று படல் வெளியான உடன் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பதிவில், "45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி, அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.