அஜித் வீட்டின் முன் தீக்குளித்த பெண் - யார் மீது தவறு?

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அதற்கு காரணம் என்ன என்று தற்பொழுது திரையுலகை சேர்ந்த பிரமல தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதாவது அஜித் சிகிச்சை'க்கு அப்போலோ மருத்துவமனை செல்லும் பொழுது அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட காரணத்தினால் அப்போலோ'வில் பணிபுரியும் செவிலியர் அங்கு நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்டு பணி மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். இதனையடுத்து புது பணியிடத்திற்கு அவரால் தினமும் சென்று வர முடியவில்லை, இதனால் அஜித் அவர்கள் தலையிட்டு நிர்வாகத்திடம் பேசி தனக்கு வேலை பழைய இடத்தில் வாங்கி தருமாறு கேட்டு தீக்குளித்துள்ளார். இதனை தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.