மீண்டும் ஓர் சிக்கலில் 'டாக்டர்'

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்திற்கு சிக்கல் மேல் சிக்கலாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்டர்'. இப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது, இதனையடுத்து இப்படத்திற்கான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியா வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர்களின் தொகைக்கு தியேட்டர்காரர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், படத்திற்கான முன்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக திரையரங்குகள் மற்றும் அதிகம் சினிமா வசூல் தரக்கூடிய இந்த ஏரியாக்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் இருப்பதால் இதற்கான முன்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்தை சுமூகமாக முடிவடையும் பட்சத்தில்தான் இங்கு முன்பதிவு மற்றும் படம் வெளியாகும்.