"சிரிப்பு டாக்டருக்கு வாழ்த்துகள்" - 'டாக்டர்' படக்குழுவினரை மனம் விட்டு பாராட்டிய இயக்குனர் ஷங்கர் !

"திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் டாக்டர் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
நேற்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' படம் வெளியாகியது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற இப்படத்தை இயக்குனர் ஷங்கரும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர், "இந்த கொரோனா காலகட்டத்தில் டாக்டர் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும் படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும்.