போர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம்பெற்ற 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்பக்கத்தில் நயன்தாராவின் இடம் பெற்றுள்ளது
கடந்த 2014'ம் ஆண்டு ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா, 2'வது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஆச்சர்யப்டுத்தினார். அதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தமிழின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்பொழுது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். அந்தளவிற்கு புகழ் பெற்றவர் நயன்தாரா.
புதிய கவுரவம் ஒன்றை சர்வதேச அளவிலான போர்ப்ஸ் பத்திரிக்கை அளித்துள்ளது. அது என்னவென்றால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த பத்திரிக்கையில் இடம்பெறுவது எளிதானதல்ல. ஆனால் அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கும் சூப்பர் டூப்பர் நடிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.