Begin typing your search above and press return to search.
தோல்வியை தழுவிய பிரகாஷ்ராஜ் - அதிகம் பேசியது காரணமா?

By :
தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவியுள்ளார்.
தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்திற்கான தேர்தலும் அதன் வாக்கு எண்ணிக்கையும் கடந்த வாரம் முதல் நடந்தன. இதில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தலைமையிலான அணியினர் பெரு வெற்றி பெற, எதிரணியாக களத்தில் நின்ற பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த தோல்வி பற்றி பிரகாஷ்ராஜ் கூறும்போது, "எதிரணியினர் என்னை உள்ளூர் அல்லாதவர் என்று முத்திரை குத்தினர். சகோதரத்துவத்தில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை கேட்பது வேதனையாக உள்ளது. அதனால் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இனியும் உறுப்பினராக தொடர்வதில் அர்த்தம் இல்லை. அதனால் சங்கத்தில் இருந்து விலகுகிறேன்" என அறிவித்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிகமாக பேசியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Next Story