Begin typing your search above and press return to search.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் !

By :
கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகனும் மறைந்த ராஜ்குமாரின் மகனுமாகிய புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இன்று காலை புனித் ராஜ்குமார் மாரடைப்ப் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் எனவும் பெங்களூர் விக்ரம் மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனைதொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் சற்று முன் புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். இதனைதொடர்ந்து பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தியேட்டர்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story