ஆர்யா என்னை அடி வெளுத்துட்டான் - விஷாலின் அனுபவம் !

""உண்மையிலேயே என்னை அடி வெளுத்துட்டான்" என நடிகர் ஆர்யா பற்றி விஷால் கூறியுள்ளார்.
இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி விஷால், ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'எனிமி'. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால் பல விஷயங்களை பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடிக்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். ஆர்யாவிடம், உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான்" என கூறினார்.