வெளிநாடுகளில் அதிக திரைகளில் வெளியிடும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை தட்டி சென்ற 'அண்ணாத்த'

வெளிநாடுகளில் அதிகளவு திரையில் திரையிடப்படுகிறது சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' திரைப்படம்.
இயக்குனர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. நவம்பர் 4'ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 600 திரையரங்குகளில் வெறியாகும் இப்படம் அயல்நாடுகளில் அதிகளவில் திரையிடப்படுகிறது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 677 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் 117, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 85, ஐரோப்பிய நாடுகளில் 43, யுனைட்டெட் கிங்டம் 35, சிங்கப்பூர் 23, கனடா 17 என மொத்தமாக 1193 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் 'அண்ணாத்த' தான்.