Kathir News
Begin typing your search above and press return to search.

"யாருய்யா நீங்கல்லாம்?" - இயக்குனர் கவுதமை குழப்பிய பா.ரஞ்சித் !

யாருய்யா நீங்கல்லாம்? - இயக்குனர் கவுதமை குழப்பிய பா.ரஞ்சித் !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Nov 2021 11:00 AM GMT

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னை பற்றிய பொய்யான பட அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளார்.





கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'காக்க காக்க'. இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் அன்புசெல்வன். இந்த பெயரில் கவுதம் மேனன் நடிப்பதாக போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த போஸ்டரை பார்த்த அதிர்ந்த கவுதம் வாசுதேவ் மேனன், இது என்ன படமென்று எனக்குத் தெரியாது என்று பதிவு செய்து இருக்கிறார்.





'அன்புசெல்வன்' படம் தொடர்பாக கவுதம் மேனன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "எனக்கு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. நான் நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படம் பற்றி என்று எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் பெயர் போட்டிருக்கும் இயக்குனரை எனக்குத் தெரியாது. அவரை நான் சந்திக்கவும் இல்லை" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News