'தளபதி' விஜயை இயக்கப்போகும் சிவா !

அடுத்தபடியாக விஜயுடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இயக்குனர் 'சிறுத்தை' சிவா கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் என்று தமிழ் திரையுலகில் கால் பதித்த சிவா, கார்த்தியை வைத்து 'சிறுத்தை' இயக்கி வெற்றிகரமாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து மெகா கூட்டணி அமைத்து அஜித்தை வைத்து 4 படங்கள் தொடர்ச்சியாக இயக்கினார். அதில் விஸ்வாசம் படம் திரையரங்குகளில் ரசிகர்கள் வரவேற்பை அதிகமாக பெற்றது. அதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 'அண்ணாத்த' படம் இயக்கினார். தீபாவளிக்கு வெளியான இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி இயக்குனர் சிவாவிடம் கூறியது, "விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், நல்லதே நடக்கும்" என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிவா உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.