இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளியின் கதையில் நடிக்கும் துல்கர் சல்மான் !

இந்திய அளவில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியின் கதையை துல்கர் சல்மான் படமாக்கியுள்ளார்.
கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி "குரூப்"-இன் கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‛குரூப்'. ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க, குரூப்பாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து துல்கர் கூறுகையில், "மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையை அமைத்தோம். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். 'குரூப்' எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும்" என கூறியுள்ளார்.