புனித் மறைவு பற்றி உருகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

"இவ்வளவு சின்ன வயதில் மறைந்துவிட்டார்" என புனித் ராஜ்குமார் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்போது உடல்நலம் குணமாகி வீட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில் புனித் மறைவுக்கு ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் அகால மரணம் அடைந்தார். அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவரது இழப்பை ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்" என தெரிவித்துள்ளார்.