இரவு, பகல் பார்க்காமல் ரஜினி படங்களுக்கு உழைத்தேன் - ரஹ்மான் !

"ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்திருக்கிறேன்" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் இருந்து ஆஸ்கர் விருது வாங்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, "ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன். அதுவும் எனது ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை" என கூறினார்.