Kathir News
Begin typing your search above and press return to search.

ராமனாக பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு முடிந்தது !

ராமனாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படப்பிடிப்பு முடிந்தது !
X

Mohan RajBy : Mohan Raj

  |  12 Nov 2021 7:00 AM IST

ராமாயணத்தை மையமக வைத்து உருவாகும் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.





இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை தழுவி உருவாகி வரும் பிரம்மாண்ட படம் "ஆதிபுருஷ்", ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதாவாக கிர்த்தி சனோன், லட்சுமணனாக சன்னி சிங் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.





இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முடிந்துள்ளது, இதுகுறித்து இதன் இயக்குனர் கூறியதாவது, "மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. மறக்க முடியாத அருமையான பயணம். இந்த படத்தில் நாங்கள் படைத்துள்ள மேஜிக்கை உங்களுக்கு காண்பிக்க காத்திருக்க முடியவில்லை என தனது மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News