Kathir News
Begin typing your search above and press return to search.

புஷ்பா'வில் ஒரு பாடலுக்கு ஆடும் சமந்தா !

புஷ்பாவில் ஒரு பாடலுக்கு ஆடும் சமந்தா !

Mohan RajBy : Mohan Raj

  |  15 Nov 2021 10:15 AM GMT

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.





இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக படமாக உருவாகிறது புஷ்பா, இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி ஒட்டுநராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.





புதிய தகவலாக புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி அதன் முடிவாக தற்பொழுது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து ஒப்பந்தம் போட்டுள்ளனர் படக்குழுவினர். இதன் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News