'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் அட்டகாசமான அப்டேட் !

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் அட்டகாசமான அப்டேட் வெளிவந்துள்ளது.
நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்பில் இப்படம் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. இதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் கூடிய அந்த போஸ்டரில், அவரது கதாபாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது, மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.