மின்னல் வேகத்தில் 'விக்ரம்' - இறுதிகட்டத்தை நெருங்கிய படப்பிடிப்பு !

By : Mohan Raj
அடுத்த மாதம் டிசம்பரில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவாகி வருகிறது விக்ரம். இப்படத்தில் மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 17'ம் தேதி கோவையில் துவங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலையை தொடங்குகிறார்கள். வரும் 2022 ஏப்ரலில் படம் வெளியாகும் என தெரிகிறது.
