இது எனது முதல் முயற்சி - 'தேள்' படம் குறித்து பிரபுதேவா !

நடனமே இல்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா கூறியுள்ளார்.
இயக்குனர் ஹரிகுமார் இயக்கியுள்ள 'தேள்' என்கிற புதிய படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு இணையாக சம்யுக்தா நடித்துள்ளார். அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் 'தேள்' குறித்து பிரபுதேவா கூறியதாவது, "இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார்.ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம்.உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்" என கூறினார். மேலும் இப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.