Kathir News
Begin typing your search above and press return to search.

காளிதாஸ் ஜெயராமை சிறைபிடித்த ஓட்டல் நிர்வாகம் !

காளிதாஸ் ஜெயராமை சிறைபிடித்த ஓட்டல் நிர்வாகம் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2021 3:45 PM IST

பணம் செலுத்தும் விவகாரம் தொடர்பாக நடிகர் காளிதாஸ் ஜெயராமை ஓட்டலில் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். இதற்கான அறை வாடகை, ஓட்டல் கட்டணம் படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தினர். ஆனால் ஓட்டல் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை உடனே ஓட்டல் கட்டணத்தை கட்டுமாறு கூறினர்.

இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். இதையடுத்து மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடித்தினர். பின்னர் நடிகர் காளிதாஸ் ஜெயராம் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News