Begin typing your search above and press return to search.
பிறந்தநாளில் ரத்த தானம் செய்த அருண் விஜய் - குவியும் பாராட்டுக்கள் !

By : Mohan Raj
நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்துள்ளார்.
நேற்று தனது 43'வது பிறந்தநாளை நடிகர் அருண் விஜய் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40 பேர் உடன் இணைந்து தானும் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
அருண் விஜய் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். ரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும், அன்புக்கும் நன்றி'' என்றார்.
Next Story
