Begin typing your search above and press return to search.
சரக்கு, அசைவம் இரண்டையும் விட்டுவிட்டேன் - சிம்பு ஓப்பன் டாக்

By :
சரக்கு, அசைவம் இரண்டையும் விட்டுவிட்டேன் என மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு.
மாநாடு படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு படத்திற்கான பிரமோஷனுக்காக சிம்பு ஐதராபாத் சென்றிருந்தார்.
அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "எனது திரையுலகப் பயணம் ஒரு தடுமாற்றத்தில் இருந்த போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். கடினமாக உழைத்து என்னுடைய பழைய நிலையை மீண்டும் மீட்டெடுத்தேன். குடிப்பதையும், நான் வெஜ் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டேன். அதன் காரணமாக 27 கிலோ வரை குறைந்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தேன்" என கூறியுள்ளார்.
Next Story