அகான்டா'வின் முதல்காட்சியை பார்க்க ஆவலுடன் உள்ளேன் - ராஜமௌலியின் ஆவல் !

'அகான்டா'வின் அறிமுகக் காட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என பிரபல இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.
தெலுங்கின் முன்னணி கதாநாயகன் பாலகிருஷ்ணா தற்போது நாயகனாக நடித்துள்ள 'அகான்டா' படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது, இயக்குனர் பொயபட்டி சீனு இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ராஜமவுலி கலந்துகொண்டார்
அப்போது அவர் பேசியதாவது, "பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு. அந்த அணுகுண்டை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என்பது இயக்குனர் பொயபட்டி சீனுவுக்கு நன்றாகத் தெரியும். அந்த ரகசியத்தை அவர் மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது, மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். உங்களைப் போலவே நானும் 'அகான்டா'வின் அறிமுகக் காட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் கண்டிப்பாகப் பார்ப்பேன்" என்றார்.