சிம்பு படங்களில் அதிகம் வசூல் - கொண்டாட்டத்தில் மாநாடு படக்குழுவினர் !

மாநாடு ப்ளாக்பஸ்டர் கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு'விற்கு கேக் ஊட்டி மகிழும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள மாநாடு படம் கடந்த 25ந் தேதி பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளிவந்தது. சிம்பு படங்களிலேயே இந்த படம்தான் அதிகம் வசூலிப்பதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன, தற்பொழுது திரையரங்குகளில் அதிக ரசிக கூட்டங்களின் ஆதரவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழு கொண்டாடியது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு கேக் ஊட்டி மகிழும் படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் விட்டு இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு ஆகியோரை பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.