அல்லு அர்ஜுனின் சர்ச்சைக்குறிய வசனம் கொண்ட விளம்பரத்துக்கு நீதிமன்றம் தடை

சர்ச்சையை தொடர்ந்து அல்லுஅர்ஜுனின் விளம்பரம் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு விளம்பரபடம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில், "தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது" என நடிகர் அல்லு அர்ஜுன் பேசுவது போன்று வசனம் வரும்.
இதற்கு தெலுங்கானா அரசு தரப்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் இதுபோன்ற தவறான கருத்துக்களை வைத்து அரசு போக்குரவத்து கழகத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தெலங்கானா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் நீதிமன்றம் தற்போது அந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த விளம்பரம் விரைவில் நீக்கப்படும் என தெரிகிறது.