மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிம்பு !

மருத்துவமனையில் இருந்து நடிகர் சிம்பு குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த 'மாநாடு' படம் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதற்கிடையில் சனிக்கிழமை, நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார் பின்னர் அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துகொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
பின்னர் வீடு திரும்பி சிம்பு தனது ட்விட்டர் பதிவில், "மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பி விட்டேன். தற்போது மெல்ல குணமடைந்து வருகிறேன். எனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லாமல் நான் இல்லை" என தெரிவித்துள்ளார்.