Kathir News
Begin typing your search above and press return to search.

"வீழ்ந்தாலும் எழுவோம்" - பாடம் சொல்லும் 'வலிமை' மேக்கிங் வீடியோ !

வீழ்ந்தாலும் எழுவோம் - பாடம் சொல்லும் வலிமை மேக்கிங் வீடியோ !

Mohan RajBy : Mohan Raj

  |  15 Dec 2021 9:30 AM GMT

'வலிமை' படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் மாஸாக வைரல் வலம் வந்துகொண்டிருக்கிறது.





இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் 'வலிமை', போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு கிடைத்த எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் இதுவரை இருந்த எதிர்பார்ப்புகளை விட அதிகம். கடந்த சில மாதங்களாக 'வலிமை' படத்தின் போஸ்டர், பாடல், படத்தின் ப்ரத்யோக புகைப்படங்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று 'வலிமை' மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு அதிக பார்வையாகர்களை ஈர்த்து வருகிறது.





வீடியோ முழுக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. கூடவே கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டது, ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது உள்ளிட்ட விஷயங்களையும் இதில் இணைத்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் வரும் வீலிங் காட்சி ஒன்றில் அஜித் நடித்துள்ளார். அதை படமாக்கியபோது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இருப்பினும் அசராத அஜித் வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த பைக் வீலிங் காட்சியை அசத்தலாக நடித்துள்ளார். இது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News