'மண்டேலா' இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

யோகிபாபு நடித்த 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்தபடியாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டாக்டர்' படம் மிகவும் வெற்றியை தேடி தந்தது. கொரோனோ இரண்டாம் அலைக்கு பிறகு ரசிகர்களை அதிகம் திரையரங்கம் பக்கம் இழுத்த பெருமை 'டாக்டர்' படத்தையே சாரும். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தை நடித்து முடித்துவிட்டார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் அதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதில் யோகிபாபு நடித்த 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.