ஆங்கில புத்தாண்டு தினத்தில் தளபதி ரசிகர்களுக்கு 'பீஸ்ட்' விருந்து

ஆங்கில புத்தாண்டு அன்று 'பீஸ்ட்' குழுவினர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக படத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் 'பீஸ்ட்', படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாரக இருக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ரசிகர் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் சிங்கிள் எப்போது என ஆர்வமாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் வருகிற ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. மேலும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் விஜய் பின்னணி பாடிய பாடல் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது