கொரோனோ விதிகளை காற்றில் பறக்கவிட்டாரா ஆலியாபட்? - கிளம்பிய புகார் !

கொரோனோ விதிகளை அலட்சியப்படுத்தியதாக ஆலியாபட் மீது புகார் கிளம்பியுள்ளது.
அலியா பட் நடித்து வரும் இந்தி படம் 'பிரம்மாஸ்த்ரா', டில்லியில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டார். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார். இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அதில் கலந்து கொண்ட ஆலியாபட்'டிற்கும் கொரோனோ தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதால் அவர் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் ஆலியாபட் அதனை பொருட்படுத்தாது அவர் விமான பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து அவரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கிளம்பியது. இதனையடுத்து ஆலியாபட் கொரோனா விதியை மீறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விமானத்தில் செல்வதற்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.