Begin typing your search above and press return to search.
வெளிநாடுகளில் சொத்து குவித்த விவகாரம் - அமலாக்கத்துறை முன் இன்று ஐஸ்வர்யா ராய் ஆஜர்

By :
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்த வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜரானார்.
கடந்த 2016'ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் இந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகின. இதில் உலகில் பல்வேறு துறையை முக்கியமாக அரசியல், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பெயர்கள் குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வெளியாகின. அதில் குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து ஏற்கனவே விசாரணைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜராகவில்லை. இந்நிலையில் 3 வது முறையாக அனுப்பிய சம்மன் தொடர்பாக டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ளார்.
Next Story