ஆஸ்கர் வாய்ப்பை தவறவிட்ட கூழாங்கல் - விக்னேஷ் சிவன் வருத்தம்!

விக்னேஷ் சிவன் தயாரித்த 'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கர் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான படம் 'கூழாங்கல்', யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம்.
ஆஸ்கர் சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் அனுப்பப்பட்ட இப்படத்துடன் 93 படங்கள் தேர்வுக்கு அனுப்பபட்டன அதில் 15 படங்கள் மட்டுமே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்தது. அதில் 'கூழாங்கல்' திரைப்படம் தேர்வாகவில்லை இதனை 'கூழாங்கல்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "இந்தப் பட்டியலில் 'கூழாங்கல்' இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சுத்தமான சினிமாவை தந்ததற்காக இயக்குனர் வினோத்ராஜைப் பாராட்ட வேண்டும். ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் எங்களது படத்தை தேர்வு செய்த இந்திய நடுவர் குழுவுக்கு எனது நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.