"நான் தற்பொழுது பகவத் கீதை படிக்கிறேன், இஸ்லாம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" - இஸ்லாமிய நடிகையின் கருத்து !

"தற்போது பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். இஸ்லாம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நடிகை உர்பி ஜாவித் கூறியுள்ளார்.
ஹந்தி தொலைக்காட்சி நடிகையும், சமீபத்திய ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளருமான நடிகை உர்பி ஜாவித் பிறப்பால் ஒரு இஸ்லாமியர், இவரது நடிப்பு, உடையம்சத்தை குறித்து இஸ்லாமியர்களால் பெருதும் விமர்சிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அதிரடியான கருத்துக்களை தற்பொழுது கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஒரு முஸ்லிம் பெண். என்னை திட்டி வரும் வசவுகளில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களிடம் இருந்து வருகிறது. நான் இஸ்லாத்தின் பெயரை கெடுக்கிறேனாம்.
நான் தற்போது பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். ஹிந்து மதம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கீதையில் இருந்து நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்" என பேசியிருக்கிறார்.