வலிமை கதைக்களம் பற்றி ஹெச்.வினோத் அளித்த தகவல்

"வலிமை காவல் துறை சம்பந்தப்பட்ட படம் தான்" என வலிமை படம் பற்றிய அப்டேட் தகவலை இயக்குனர் ஹெச்.வினோத் கசிந்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. தென்னிந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சூப்பர் தகவல் ஒன்றை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் கூறியதாவது, "நடிகர் அஜித்'திற்கு வலியை தாங்க கூடி சக்தி மறறவர்களை விட அதிகம். படப்பிடிப்பில் அடிபட்ட உடன் மற்றவர்கள் துடித்திருப்பார்கள் ஆனால் அஜித் அதனை சாதரணாமாக எடுத்துக்கொண்டு மீண்டும் அடுத்த காட்சி எடுக்க தயாராகிவிடுவார். இப்படி உடம்பில் எந்த பிரச்சினை என்றாலும் அதனை தாங்கி கொண்டு முகத்தில் வலியை காட்டிக்கொள்ளாமல் நடித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
மேலும் வலிமை ஒரு காவல்துறை சம்மந்தப்பட்ட படமே" என்ற தகவலையும் தெரிவித்தார்.