'மாநாடு' படக்குழுவினரிடம் மன்னிப்பு கோரிய இயக்குனர் செல்வராகவன்

மாபெறும் வெற்றியடைந்த 'மாநாடு' படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் 'மாநாடு'. இப்படம் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டதட்ட கொரோனோ ஊரடங்கு பாதிப்பிலிருந்து திரையுலகை மீட்ட திரைப்படம் என்றே 'மாநாடு' திரைப்படத்தை சொல்லலாம் அந்தளவிற்கு இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 'மாநாடு' படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, "தாமதமாய் 'மாநாடு' பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா அருமை. நண்பர்கள் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி" என குறிப்பிட்டுள்ளார்.