'அர்ஜுன்' அவதாரத்தில் அஜித் - வெளியானது 'வலிமை' ட்ரெய்லர்

'அர்ஜுன்' என்ற காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சியில் அமரை வைத்த இப்படம் வரும் ஜனவரியில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று மாலை 'வலிமை' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
அர்ஜுன் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றத்தில் அஜித், மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா, முழுவதும் பைக், கார் சேஸிங் காட்சிகள், நிதானமாக அஜித் பேசும் வசனங்கள், காத்திருப்பின் வேகத்தை அதிகரிக்கும் சஸ்பென்ஸ் என பக்கா அஜித் பேக்கேஜ் படமாக ஹெச்.வினோத் எடுத்திருப்பார் என படத்தின் ட்ரெய்லர் கட்டியம் கூறுகிறது. "வலிமை'ன்றது அடுத்தவன காப்பாத்த, அழிக்க இல்லை", "ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடுறவங்களை கேவலப்படுத்தாத", "அடுத்தவங்க உயிர் எடுக்குற உரிமை நமக்கு இல்லை" என்பது போன்ற அஜித் மேனரிசத்துடன் கூடிய வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது 'வலிமை' ட்ரெய்லர்.