Begin typing your search above and press return to search.
"இளமை இதோ! இதோ!!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இசைஞானி!

By :
இசைஞானி இளையராஜா உடல்நலம் சரியில்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்திகளை பொய்யாக்கும் விதமாக வீடியோ ஒன்றை குதூகலமாக வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
கடந்த இரு தினங்களாக இசைஞானி இளையராஜா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து இளையராஜா தரப்பில் எந்ந விளக்கமும் அதிகாரப்பூர்வமாக தரப்படவில்லை.
இந்நிலையில் இன்று இளையராஜா தனது அதிகாரப்பூர் ட்விட்டர் பதிவில் 'இளமை இதோ! இதோ!" என்ற சகலகலா வல்லவன் படப்பாடலை பாடி நியூ இயர் வாழ்த்து கூறிய பாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன்மூலம் இசைஞானி நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story