அஜித்குமாரை தாறுமாறாக புகழ்ந்த இயக்குனர் ராஜமௌலி !

"அஜித் மிகவும் பணிவான மனிதர்" என அஜித்குமார் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.
அடுத்த ஜனவரி மாதம் அஜித்குமார் நடிப்பில் 'வலிமை' திரைப்படமும், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படமும் வெளிவர இருக்கிறது. இதற்கான முன் ப்ரமோஷன் வேலைகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றி அஜித்குமாருடனான சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஒருமுறை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி வளாகத்தில் ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றேன், கூட்டம் குறைவாக இருந்தது. அங்கு அஜித் சாப்பிட்டு கொண்டிருந்தார். உடனே என்னை பார்த்ததும் எழுந்து என் அருகில் வந்து அவர் இருந்த மேஜைக்கு என்னை அழைத்து சென்றார். பின் அங்கு வந்த மனைவி என்னை தேடவும் அவர் உடனே உங்கள் மனைவியா அது என கேட்டு உடனே எழுந்து சென்று என் மனைவியிடத்தில் "வணக்கம் நான்தான் அஜித்குமார்" என தன்னை அறிமுகம் செய்து அவரையும் அழைத்து வந்து உபசரித்தார், என்ன ஒரு பணிவான, நெகிழ்ச்சியான மனிதர்" என அஜித்குமார் அவர்களை இயக்குனர் ராஜமௌலி புகழ்ந்துள்ளார்.