'அபூர்வ சகோதரர்கள்' கமல் எனக்கு இன்னமும் ஆச்சர்யமே - இயக்குனர் ராஜமௌலி பிரமிப்பு!

By : Mohan Raj
இன்னமும் கமல்ஹாசன் அவர்களின் 'அபூர்வ சகோதரர்கள்' பட நுணுக்கம் எனக்கு புரியாத புதிராக உள்ளது என இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக 400 கோடி ரூபாய் செலவில் ஆர்.ஆர்.ஆர் படம் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தமிழ் திரையுலகின் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்ககை பற்றி பெருமிதமாக கூறினர்.
அதில் இயக்குனர் ராஜமௌலி கூறியதாவது, "இன்னுமும் நான் கமல்ஹாசன் அவர்களை வியந்து பார்க்கிறேன் அதிலும் நாம் உபயோகப்படுத்தும் நுணுக்கங்ககளை 20 ஆண்டுகளை முன்பே உபயோகித்திருப்பார் கமல்ஹாசன் அவர்கள். உதாரணமாக 30 ஆண்டுகள் முன் வந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் சில காட்சிகளை எப்படி கமல்ஹாசன் நடித்தார் என என்னால் இன்னமும் கண்டறிய இயலாது புரியாத புதிராக இருக்கிறது" என்றார்.
