Kathir News
Begin typing your search above and press return to search.

விக்னேஷ் சிவனை சிலாகிக்கும் அஜித் ரசிகர்கள்

விக்னேஷ் சிவனை சிலாகிக்கும் அஜித் ரசிகர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2022 12:15 PM GMT

அஜித் படத்திற்காக சம்பளம் வாங்காமல் பாடல் எழுதிக்கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.





இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் 'வலிமை', போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா. வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளது.





இதில் புதிய தகவலாக படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை பற்றிய தகவல் அஜித் ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது. 'வேற மாதிரி', 'அம்மா' பாடல்கள் ஆகிய இரண்டையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். தற்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் ஒரு பேட்டியில் கூறும் போது "இரண்டு பாடல்களையும் எழுத இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை" என கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News