தள்ளிப்போகிறதா பிரபாஸின் 'ராதேஷ்யாம்'? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

கொரோனோ மூன்றாம் அலையை முன்னிட்டு பான் இந்தியா படமான 'ராதேஷ்யாம்' படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.
கொரோனோ இரண்டு அலை முடிந்து மீண்டும் திரையரங்குகள் சகஜ நிலைக்கும் திரும்பிய நிலையில் படங்கள் விருவிருவென வெளியாகின. இதனால் பான் இந்தியா படமாக தயாரிக்கப்பட்ட பிரபாஸ் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படமும் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 14'ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இந்திய சினிமாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் கொரோனோ மூன்றாம் அலை ஒமைக்கிரான் என உருமாறிய வைரஸ் ரூபத்தில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவ துவங்கியதால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனோ பரவலை கட்டுப்படுத்துவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பெரும் படங்கள் வெளியீடு தள்ளிப்போனது. இதனால் பான் இந்தியா படமாகிய 'ராதேஷ்யாம்' படமும் தள்ளிப்போகியுள்ளது. மீண்டும் இப்படம் வெளியாகும் தேதி கொரோனோ பரவல் குறைந்த பிறகு அறிவிக்கப்படும் என தெரிகிறது.