Kathir News
Begin typing your search above and press return to search.

'வலிமை' ரிலீஸ் - போனிகபூர் கூறிய முக்கிய தகவல்

வலிமை ரிலீஸ் - போனிகபூர் கூறிய முக்கிய தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2022 12:30 PM GMT

தீவிரமாகும் ஊரடங்கால் 'வலிமை' வெளியீடு தள்ளிப்போகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வேளையில் தயாரிப்பாளர் போனி கபூர் இதுபற்றி அறிவித்துள்ளார்.





இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் வலிமை, நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமாவின் முக்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். இந்நிலையில் வரும் ஜனவரி 13'ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'வலிமை' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனோ ஊரடங்கு போடப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 50 சதவிகித இருக்கைகளே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த 'வலிமை' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முடிவு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், "இரவு நேர ஊரடங்கு காரணமாக 'வலிமை' படத்தின் வெளியீட்டில் ஏதும் மாற்றம் இருக்காது. அதேசமயம் ஊரடங்கு இன்னும் தீவிரமாகும் பட்சத்தில் படத்தின் வெளியீடு பற்றி மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News